Header Ads

  • BREAKING



    அமெரிக்கர் அல்லாத 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவர்: டொனால்டு டிரம்ப்.

    வாஷிங்டன்:அமெரிக்காவில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக இன்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.30 லட்சம் பேர்இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருக்கும் அமெரிக்கர் அல்லாத லட்சக்கணக்கானோரை வெளியேற்றுவேன். அதிபராக பதவியேற்ற உடன் 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள். அதாவது, அமெரிக்காவில் வாழும் குற்றப் பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்டோர் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களை கண்டறிய வேண்டும்.
    30 லட்சம் பேர் வரை கூட இருப்பார்கள்.அவர்களை பிடித்து நாட்டிற்கு வெளியே அனுப்புவோம் அல்லது கைது செய்து சிறையில் அடைப்போம். அதேபோல் அமெரிக்க மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள தடை சுவர்கள் உயர்த்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad