Header Ads

  • BREAKING



    ட்ரம்ப் 'பாரீஸ்' ஒப்பந்தத்தை கைவிடப் போகிறாரா?

    அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப், புவி வெப்பமயமாதலை தடுக்க, ஐ.நா-வால் கொண்டுவரப்பட்ட 'பாரீஸ் ஒப்பந்தத்தை' சீக்கரமே கைவிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.
    சென்ற ஆண்டு ஐ.நா தலைமையில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த 190க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒப்புதலோடு கொண்டுவரப்பட்டது பாரீஸ் ஒப்பந்தம். இந்த ஓப்பந்தத்தின் முக்கிய அம்சம், உலக வெப்பத்தை இனிமேலும் அதிகரிக்கச் செய்யக் கூடாது என்பதாகும். அமெரிக்கா உட்பட உலகின் பெரும்பான்மையான நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக, இந்த ஆண்டு நவம்பர் ஐந்தாம் தேதி நடைமுறைபடுத்தின.
    ஆனால், தனது தேர்தல் பிரச்சாரங்களின் போதே, புவி வெப்பமயமாதலை நிராகரித்து பேசிய டொனால்ட் ட்ரம்ப், அதிபர் பதவி ஏற்றவுடன் பாரீஸ் ஒப்பந்தத்தை கைவிடக்கூடும் எனும் தகவல் வரத் தொடங்கியுள்ளன.
    இது பற்றி தற்போது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக உள்ள ஜான் கெர்ரி, 'ஒபாமாவின் பதவி காலம் வரும் ஜனவரி 20 வரை உள்ளது. அது வரை இந்த ஒப்பந்தத்தை வலுபெறச் செய்ய என்னால் முடிந்த காரியங்களைச் செய்வேன். ஏனென்றால், உலகில் இருக்கும் பெரும்பாலான விஞ்ஞானிகள் பருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இது காலத்தின் கட்டாயம்.' என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad