இந்தோனேசிய தீவில் கரையொதுங்கிய மர்ம விலங்கு.
இந்தோனேஷிய தீவில் கரையொதுங்கிய மர்மமான உயிரினம் கடல் ராட்சசன் எனக் கூறப்பட்ட நிலையில், உண்மையில் அது என்ன உயிரினம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சேராம் தீவில், கரையொதுங்கிய 50 அடி நீள மர்மமான கடல்வாழ் உயிரினத்தால், கடற்கரை ரத்தத்தால் செந்நிறமானதோடு, துர்நாற்றமும் வெளியேறியது. இந்நிலையில் அது, தந்தம் கொண்ட பலீன் திமிங்கல இனத்தைச் சேர்ததாகக் இருக்கக் கூடும் என்றும், பாக்டீரியா தொற்றால் பாதித்திருந்த அது, மிதவெப்ப நீரோட்டத்துக்கு வந்தபோது உடல்முழுக்க பாக்டீரியா கிருமி பரவி இறந்திருக்ககூடும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மலுகு தீவுக் கூட்டத்தில் மிகப்பெரிய தீவான சேராம் தீவில் திமிங்கலங்கள் இடம் பெயருவது வழக்கம்தான் எனக் கூறிய ஆய்வாளர்கள், கப்பல் ஏதேனும் மோதியதாலோ அல்லது, அது கூட்டத்தில் இருந்து தடம் மாறி கரைசேர்ந்து இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.








கருத்துகள் இல்லை