தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமனம்.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நிரந்தர ஆளுநர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர ராவ் மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும் உள்ளதால் அவருடைய பணிச்சுமை அதிகமாக உள்ளது. பலமாதங்களாக தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதே போன்றுஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், குஜராத் மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புதிய ஆளுநர்களுக்கான இடம் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்








கருத்துகள் இல்லை