மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது வன்முறை.
மேற்கு வங்க மாநிலம் உள்ளாட்சித் தேர்தலில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு வாக்குப் பதிவு மையம் சூறையாடப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. வடக்கு தினஜ்பூரில் உள்ள ராய்கஞ்ச் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது மர்மநபர்கள் சிலர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சூறையாடியதோடு, வாக்குப்பதிவு மையத்தில் இருந்த அதிகாரிகளையும் அடித்து உதைத்தனர். தேர்தல் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் கெஞ்சியும், அவர் இளைஞர்களால் சுற்றிவளைத்து தாக்கப்பட்டார். வாக்குப்பதிவு மையத்தில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தி வன்முறையாளர்களை விரட்டி அடித்தனர். வன்முறையில் பலரும் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதால், கலவரம் பெரிதானது. துப்பாக்கி முனையிலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.








கருத்துகள் இல்லை