வட தமிழக பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் அனல்காற்று வீசும் – வானிலை மையம்.
சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பக்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்பக்காற்றின் காரணமாக சென்னையில் வெப்பநிலை 2 டிகிரிக்கும் அதிகமாக உயரக்கூடும் என்று கூறியுள்ள வானிலை மையம், வட தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளிலும் வெப்பக்காற்று வீசும் என்று கூறியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 43 டிகிரியும், குறைந்த பட்சமாக 29 டிகிரியும் வெப்பநிலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 45 டிகிரியும், வேலூரில் 43.3 டிகிரி வெப்பநிலையும் பதிவாகி இருக்கிறது.








கருத்துகள் இல்லை