ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதனை வரவேற்பேன் – மு.க.ஸ்டாலின்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலையில் அமைச்சர் தி.மு.க. மீது பழிபோடுவதாக குற்றம்சாட்டினார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதோ, வராததோ அவரது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
நீர்நிலைகளை தூர் வார தி.மு.க.வினரை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த ஸ்டாலின், நீர் நிலைகளை பலர் ஆக்கிரமித்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தனி கவனம் செலுத்தி ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








கருத்துகள் இல்லை