ரஜினிக்கு நாயகியாக ஹியூமா குரேஷி ஒப்பந்தம்?
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ஹியூமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
‘கபாலி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு மே 28-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இப்படத்திற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கதையின் பெரும்பகுதி மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல அமைத்துள்ளார் ரஞ்சித். இதற்காக மும்பை தாராவி போன்ற அரங்கம் அமைக்கும் பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இப்படத்தின் நாயகியாக ஹியூமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தி ஊடகங்கள் அனைத்துமே இச்செய்தியை வெளியிட்டுள்ளார்கள். ஹியூமா குரேசியும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இச்செய்தியை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை.








கருத்துகள் இல்லை