கடவுளும், சமயமும் இல்லாத உலகைக் கற்பனை செய்ய முடியுமா?
கடவுள் எனும் சொல் குறிக்கும் பொருள் வேறு. சமயம் எனும் சொல் குறிக்கும் பொருள் வேறு. ஆனால் மனித நம்பிக்கை இல்லாமல் மனித சமூகம் இயங்க முடியுமா என்பதே இந்தக் கேள்வியின் பொருளாக இருக்க முடியும்.
அதற்குக் காரணம் என்ன?
இயற்கை என்னும் பேராற்றலின் வடிவமைக்கப்படாத ஒழுங்குமுறை அல்லது ஒழுங்கு முறை இல்லாத வடிவமைப்பு இவை குறித்த மனிதனின் வியப்பு, ஈர்ப்பு, அச்சம் இந்த மூன்றும் கலந்த இடத்திலிருந்து தான் தெய்வ நம்பிக்கை என்பது பிறந்தது. கடவுள் என்ற சொல் குறிக்கும் பொருள் வேறு. தெய்வம் என்ற சொல் தான் சரி.
- மானுடவியல் ஆய்வாளர்
தொ. பரமசிவன்







கருத்துகள் இல்லை