தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வெப்ப சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








கருத்துகள் இல்லை