Header Ads

  • BREAKING



    பினாமி சொத்துக்களுக்கு எதிராக அடுத்த 'தாக்குதல்': நிதிஷ் குமார்.

    மதுபன் : 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்றதை போல், 'பினாமி' சொத்துகளுக்கு எதிராகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.அடுத்த 'தாக்குதல்'பீகார் மாநிலம் மதுபனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்ததாவது: 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதை வரவேற்கிறேன். இது கறுப்பு பணம் மற்றும் சட்டவிரோதமாக செயல்படும் வர்த்தகங்களுக்கு முடிவு கட்டும். இதைப்போல 'பினாமி' சொத்துகளுக்கு எதிராகவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து, பினாமி பெயரில் சொத்து சேர்த்தவர்கள் இப்போது நிம்மதியாக இருக்கின்றனர்.
    எனவே அடுத்த 'தாக்குதல்' அவர்கள் மீது இருக்க வேண்டும்.நடவடிக்கை தேவை500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவிக்கும் முன் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளாததால், ஏழை மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகினர். புதிய நோட்டுகள் மக்களுக்கு சிரமமின்றி கிடைக்க, உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad