அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பதிவுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.
சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பதிவுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தடையை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணையை டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை முறைப்படுத்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசு இன்று தாக்கல் செய்தது.
அரசின் பரிந்துரைகளை அரசு வழக்கறிஞரான அய்யாத்துரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். எந்தெந்த நிலத்தை அரசு அங்கீகரிக்க தயாராக உள்ளது என அந்த அறிக்கையில் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த பின் உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கும்.







கருத்துகள் இல்லை