மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் நலக் கூட்டணியினர் மீது போலீஸார் தடியடி
மதுரை: மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலக் கூட்டணியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, விவசாய சங்கங்களின் சார்பில் 2 நாட்கள் நடைபெறும் ரயில் மறியல் போராட்டம் இன்று காலை தொடங்கியது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் ரயில் மறியல் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை ரயில் நிலையத்தில் அனுமதியின்றி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலக் கூட்டணியினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.







கருத்துகள் இல்லை