Header Ads

  • BREAKING



    ரூ. 100 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம்: மோகன்லாலின் புலிமுருகன் சாதனை!

    மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகதிபாபு, நமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன மலையாளப் படம் - புலிமுருகன்.
    வசூலில் சாதனை படைத்துள்ள புலிமுருகன், மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆக உள்ளது. இந்தப் படத்தின் உரிமையை வாங்க பலத்த போட்டி நிலவியது.
    புலிமுருகன் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார். இதனையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.
    இதுவரை மலையாளத்தில் வெளியான எந்தவொரு படமும் ரூ. 100 கோடியைத் தொட்டதில்லை. அதெல்லாம் ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படங்களுக்கே உரியதாக இருந்த நிலையில் ரூ.
    100 கோடியை வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது புலிமுருகன்.
    தனது 35-வது நாளில் இந்த உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதை ஃபேஸ்புக்கில் அதிகாரபூர்வமாக அறிவித்த மோகன்லால், இந்தப் படத்துக்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad