Header Ads

  • BREAKING



    போகன்... பத்துலட்சம் பேர் பார்த்த டீசர்!

    ஒரு நிமிடம் ஓடக்கூடிய 'போகன்' படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
    ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகா மோத்வானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'போகன்' படத்தின் டீசர், ரசிகர்களுக்கு 'வஞ்சிகோட்டை வாலிபன்' படத்தின் ஜெமினி கணேசன் - பி எஸ் வீரப்பா - பத்மினி ஆகியோரை நினைவுபடுத்துகிறதாம் பலருக்கும்.
    'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து இருக்கும் 'போகன்' திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் 'ரோமியோ ஜூலியட்' புகழ் லக்ஷ்மன்.
    விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த டீசருக்கு டி இமானின் இசையும், சௌந்தர்ராஜனின் ஒளிப்பதிவும், அந்தோணியின் படத்தொகுப்பும் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனின் சண்டை காட்சிகளும் மேலும் பலம் சேர்த்துள்ளன.
    'இந்த பூனை தெரியுமா...முத்து செய்த பெட்டியில்...' என்று ஜெயம் ரவியும் - அரவிந்த் சுவாமியும் போதையில் பாடும் பாட்டோடு நிறைவு பெறும் 'போகன்' படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் ஒரு மர்ம முடிச்சைப் போட்டிருக்கிறது...
    '23 மணி நேரத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை 'போகன்' டீசர் பெற்று இருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. வெற்றிப் பாதையில் செல்வதற்கு இதை ஒரு நல்ல துவக்கமாக நாங்கள் கருதுகிறோம். 'யார் இந்த 'போகன்' என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.... அது ஜெயம் ரவியாக இருக்கலாம் அல்லது அரவிந்த் சுவாமியாக இருக்கலாம். ஏன், ஹன்சிகாவாகவும் இருக்கலாம்.... விரைவில் 'போகன் யார் என்பதை திரையில் பார்த்து ரசிகர்கள் அறிந்து கொள்வார்கள்....' என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறுகிறார் 'போகன்' படத்தின் இயக்குநர் லக்ஷ்மன்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad