திருமணவிழாவில் நடனமாட ரூ.1 கோடி சம்பளம் பெற்ற நடிகை
சுரங்க தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமண விழாவில் நடனமாட நடிகை ராகுல் ப்ரீத் சிங் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள அரண்மனை மைதானத்தில், ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிரம்ஹனிக்கும், ராஜீவ் ரெட்டிக்கும், பல கோடி ரூபாய் செலவில், கோலாகலமாக இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி, அரண்மனை மைதானம் தான் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. ஹம்பியில் உள்ள வித்தலா கோவில், சென்னையில் உள்ள கவுல் பஜார் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், செட் போடப்பட்டுள்ளன. நாடு முழுவதும், 500, மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, பொதுமக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் பல கோடி செலவில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விழாவில் தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்களை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் முக்கியமாக தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் ராகுல் ப்ரீத் சிங் நடனம் ஆடியுள்ளார். இந்த விழாவில் ஆட இவருக்கு ரூ.1 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







கருத்துகள் இல்லை