25 ஆண்டுகளாக இலை, மரக்கட்டைகளை உணவாக உண்ணும் வினோத மனிதர்.
பாகிஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளாக இலை மற்றும் மரக் கட்டைகளை மட்டுமே சாப்பிட்டு ஒருவர் நோயின்றி வாழ்ந்து வருகிறார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா மாவட்டத்தைச் சேர்ந்த மெமூத் பட் என்பவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வேலையில்லாமல், உண்ண உணவில்லாமல் ஏழ்மையில் வாடியுள்ளார். அப்போது பசிக்காக இலைகள் மற்றும் சிறிய மரக்கட்டைகளை உண்டு பசியைப் போக்கிக் கொண்டுள்ளார். அதுவே நாளடைவில் பழக்கமாகி இலைகள் மற்றும் மரக்கட்டைகள் அவருக்கு மூன்று வேலை உணவாகி விட்டது. சிறியவயதில் சாப்பாட்டுக்காக மிகவும் கஷ்டப்பட்ட போது, பிச்சை எடுப்பதை விட மரக்கட்டைகளை உண்பதே மேல் என்று தாம் எண்ணியதாக மெமூத் பட் கூறியுள்ளார். தற்போது கழுதை வண்டியை வைத்து ஒரு நாளுக்கு 600 ரூபாய் சம்பாதிக்கும் மெமூத் பட், இன்னும் இலைகளை மட்டுமே உண்ணுகிறார். இதுவரை அவர் நோய் என்று கூறி மருத்துவரை அண்டியதில்லை என்று அப்பகுதி மக்கள் மெமூத்தை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.








கருத்துகள் இல்லை