தமிழக விவசாயிகளின் போராட்டம் மே 25 வரை ஒத்திவைப்பு.

டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் மே 25-ஆம் தேதி வரை தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, போராட்டத்தை மே 25-ஆம் தேதி வரை ஒத்திவைக்கிறோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் மே 25-ஆம் தேதிக்கு பிறகு போராட்டம் மீண்டும் தொடரும் எனக் கூறினார். இதுவரை தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்.
மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக உட்பட அனைவரும் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த முடிவை எடுத்திருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.







கருத்துகள் இல்லை