அமெரிக்காவின் போர்க்கப்பலை தாக்கி மூழ்கடிக்க தயார்: வடகொரியா.
அமெரிக்காவின் சக்திவாய்ந்த விமானம் தாங்கி போர் கப்பலை தாக்கி மூழ்கடிக்க தயார் என வடகொரியா அறிவித்துள்ளளது. வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை,அணுசக்தி சோதனை நடத்தி வருவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இரு நாடுகளும் தாக்குதல் நடத்தப்போவதாக ஒன்றையொன்று எச்சரித்து வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மேற்கு பசுபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள அணுசக்தி ஆயுதங்கள் கொண்ட விமானம் தாங்கி அமெரிக்க போர்கப்பலான கார்ல் வின்சனை ஒரே தாக்குதலில் மூழ்கடிக்கும் திறன் வடகொரியாவிற்கு இருப்பதாக ஆளும்கட்சியின் நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் வடகொரியாவின் ராணுவ பலம் உலகிற்கு வெளிப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க போர் கப்பலுடன் இணைந்து 2 ஜப்பான் கடற்படை கப்பல்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








கருத்துகள் இல்லை