இமாச்சல பிரதேசத்தில் வெண்பனி பொழிவு.
இமாச்சலப்பிரதேச மாநிலம் லாஹவ்ல் – ஸ்பிட்டி மாவட்டத்தில் வெண்பனி பொழியத் தொடங்கியுள்ளது. அந்த மாவட்டத்தின் டாட் பள்ளத்தாக்கில் அதிகளவில் பனி பொழிந்து வருவதால் வீடுகள், மரங்கள், மலைத்தொடர்கள் மீது பனிப்போர்வை போர்த்தியது போல காட்சி அளிக்கிறது. வீடுகள் மீது படர்ந்து கிடக்கும் பனித்திரள்களை மக்கள் அகற்றி வருகின்றனர். இதேபோல் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற முகல் சாலை இன்று திறக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர். சாலையில் 2 மீட்டர் உயரத்து மூடியிருந்த பனி அகற்றப்பட்டதால் மீண்டும் சாலை திறக்கப்பட்டது. வாகனங்களில் செல்லும் பயணிகள், மேகம் தவழும் காட்சிகளையும், பனி படர்ந்த மலைத்தொடர்களின் வசீகரத்தையும் கண்டுகளித்தபடி செல்கின்றனர்.








கருத்துகள் இல்லை