வடகொரியா கடற்படையினர் போர்ப் பயிற்சி ஒத்திகை. மீண்டும் போர் பதற்றம்.
வட கொரியாவின் கடற்படை கப்பல்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு நடுக்கடலில் தீயை உமிழ்ந்தன.அமெரிக்காவுக்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்ள எதற்கும் தயார் என்றும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஜப்பான் படைகளும் அமெரிக்கப் படைகளும் தங்கள் ஆற்றலை நிரூபிக்க போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டதற்கு பதிலடியாக வடகொரியாவும் தனது கடற்படையின் பலத்தை பறைசாற்றியது. அமெரிக்காவின் மிகப்பெரிய சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல்களுடன் அதன் போர்க்கப்பல் ஒன்று தென் கொரியா துறைமுகமான பூசன் பகுதியில் வட்டமிட்டுள்ளது. இதனால் கொரியத் தீபகற்பத்தில் மீண்டும் போர்ப்பதற்றம் உருவாகியுள்ளது.








கருத்துகள் இல்லை