ரூ.3871 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத வழக்கு – தொழிலதிபர் கைது.
வங்கிகளிடம் வாங்கிய கடன் 3 ஆயிரத்து 871 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தாதது தொடர்பான புகாரில், REI AGRO நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ஜூன்ஜூன்வாலாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஐக்கிய அரபு நாடுகளில் அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்ட நிலையில் இந்தியா திரும்பிய தொழிலதிபரை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்துள்ளனர்.கொல்கத்தாவில் நடத்தி வந்த நிறுவனம் சார்பில் 14 வங்கிகளிடம் அவர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று வங்கிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 போலி நிறுவனங்களின் பேரில் கடன் வாங்கி ஏமாற்றியதாகவும் தொழிலதிபர் சஞ்சய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








கருத்துகள் இல்லை