துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 கிலோ தங்கம் பறிமுதல்.
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 கிலோ தங்க கட்டிகளை டெல்லியில் வருவாய் புலனாய்வு துறையினர் கைப்பற்றியுள்ளனர். குஜராத் மாநிலம் முந்திரா துறைமுகத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோழி முட்டைகளை பொறிக்கச் செய்வதற்கான இன்குபேட்டர் எந்திரத்தில் வைத்து துபாயில் இருந்து நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து விசாரித்த போது நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 90 கோடி ரூபாய் மதிப்பிலான 300 கிலோ தங்கத்தை இன்குபேட்டரில் வைத்து துபாயில் இருந்து கடத்தி வந்த அதிர்ச்சி விவரம் வெளியானது. இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடக்கிறது. தற்போது விமானம் மூலமே தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வரும் நிலையில், கடல் மார்க்கமாக தங்கம் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது








கருத்துகள் இல்லை