இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுப்பாலம் அஸ்ஸாம்-சீனா எல்லையருகில் வரும் 26ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்படுகிறது. சுமார் ஒன்பதே கால் கிலோமீட்டர் தொலைவுடைய இந்த பாலம் 60 டன் எடையை தாங்கக்கூடியது. பிரம்மபுத்ர நதியின் மீது அமைக்கப்படும் இந்தப் பாலத்தின் தொடக்கவிழா நிகழ்வுடன் பாஜக தனது 3வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை தொடங்க உள்ளது.
இந்தியா-சீனா எல்லையில் ராணுவத்திற்கு தேவையான போர் உபகரணங்களை கொண்டு செல்வதற்கு இந்தப் பாலம் இந்தியாவுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அஸ்ஸாம் அருணாச்சலம் ஆகிய மாநில மக்களுக்கு ரயில், விமான சேவைகளை தொடங்குவதற்கான முன்னோட்டமாகவும் இது அமைய உள்ளது. தற்போது மும்பையின் பாந்த்ரா-வோர்லி கடல்பாலம்தான் இந்தியாவின் மிகப்பெரிய பாலமாக உள்ளது. இதன் நீளம் சுமார் 4 கிலோமீட்டர்.








கருத்துகள் இல்லை