வருகிற 15-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவிப்பு.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 15-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். ஓய்வுதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏழாயிரம் கோடி ரூபாயை வழங்குவது, 13 வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மார்ச் 7, ஏப்ரல் 28 தேதிகளில் அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் வியாழனன்று ஆலோசனை நடத்திய அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், வரும் 15-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். வரும் 9-ம் தேதி அனைத்து மண்டல தலைமையகங்களில் வாயில் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.








கருத்துகள் இல்லை