எல்லையில் இந்திய வீரர்களை சுட்டுக் கொன்று கொடூரம் பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம்.
இந்திய வீரர்கள் கொலை செய்யப்பட்டு, உடல் சிதைக்கப்பட்ட விவகாரத்துக்கு பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி புகுந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், ரோந்து சென்றுகொண்டிருந்த ராணுவ வீரர் பரம்ஜித் சிங், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பிரேம்சாகர் ஆகியோரை சுட்டுக்கொலை செய்து, அவர்களது உடல்களை சிதைத்துப் போட்டுவிட்டுச் சென்றனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் ஆஜரானார். அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.








கருத்துகள் இல்லை