தமிழகம் முழுவதும் 17 நாட்களாக நடைபெற்று வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்.
அரசு மருத்துவர்களுக்கான முதுநிலை பட்டப்படிப்புக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக 17 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதனால் புறநோயாளிகள், அறுவை சிகிச்சை நோயாளிகள் என பலரும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட உயர்நீதிமன்றம் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறியதையடுத்து தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று போராட்டத்தைக் கைவிடுமாறு மருத்துவர்களை கேட்டுக் கொண்டனர்.பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவர் சங்கத்தினர்,போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தனர்.








கருத்துகள் இல்லை