எல்லையில் மீண்டும் அத்துமீறும் பாகிஸ்தானால் பதற்ற நிலை.
எல்லைப் பகுதியில் மூன்று நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அப்பாவி கிராம மக்களை குறிவைத்து பீரங்கி குண்டுகளை வீசித்தாக்குதல் தொடுத்து பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாவட்டம் ரஜோரி மாவட்டத்தில் கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர். நகர முடியாத, நோயுற்ற முதியோரை வீட்டுக்குள் பூட்டி விட்டு ஊரை விட்டு வெளியேறி வந்ததாக பலர் கண்ணீருடன் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் அச்சமும் பீதியும் பரவியுள்ளது. விளைச்சலுக்கு தயாராக உள்ள கோதுமைப்பயிர்களை விட்டுப் போகவும் முடியாமல் உயிரைப்பிடித்துக் கொண்டு பலர் வாழ்கின்றனர். ரஜோரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 5 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 87 பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.








கருத்துகள் இல்லை