டெல்லி மாணவி நிர்பயா கொலை வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.
ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட டெல்லி மாணவி நிர்பயா கொலைவழக்கில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 2012ம் ஆண்டில் தமது ஆண் நண்பருடன் இரவில் பேருந்தில் ஏறிய 23 வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 2014ம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. இந்நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக 4 குற்றவாளிகள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி, அசோக் பூசன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.








கருத்துகள் இல்லை