எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மூதாட்டி சுட்டுக் கொலை.
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 60 வயது மூதாட்டியை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்ந்ததையடுத்து, அனைத்து எல்லை பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் அருகே, எல்லையில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 4.30 மணி அளவில் பாகிஸ்தானை சேர்ந்த 60 வயது மூதாட்டி எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த 120 பட்டாலியன் படையினர் எச்சரித்தும் கேட்காததால் அவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.








கருத்துகள் இல்லை