ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து மீட்கக்கோரி மனு.
தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் அந்த சமூகத்தை சாராதவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அந்த நிலங்களை மீட்பது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அரசும், வருவாய்த்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டோரின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது. இது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.








கருத்துகள் இல்லை