அரசியல்வாதிகளை மாவோயிஸ்டுகள் கொல்ல வேண்டும் – பப்பு யாதவ் சர்ச்சைப்பேச்சு.
ராணுவ வீரர்களை கொல்லுவதற்கு பதிலாக அரசியல்வாதிகளை கொலை செய்யுங்கள் என்று மாவோயிஸ்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் அறிவுரை வழங்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மாதேபுரா மக்களவை தொகுதியின் உறுப்பினரான அவர், சாதாரண குடிமக்களின் உடைமைகள் சுரண்டப்படுவதற்கு பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருப்பதாகவும், அவர்கள் தான் நாட்டை கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே பாதுகாப்புப் படைவீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக அரசியல் தலைவர்களை கொலை செய்யுமாறு மாவோயிஸ்டுகளுக்கு பப்பு யாதவ் அறிவுரை கூறியுள்ளார்








கருத்துகள் இல்லை