சென்னை | மூதாட்டிக்கு தொல்லை தரும் உள்நோக்கத்துடன் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை.
சென்னை மீனம்பாக்கம் நங்கநல்லூரில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் கணவன் இறந்தநிலையில், இரண்டாவது தளத்தில் வயதான மூதாட்டி வசித்து வருகிறார். அதே அடுக்கு மாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் வசிப்பவர் புற்றுநோய் மருத்துவர் சுப்பையா. இவர் பா.ஜ.க மாணவர் அணியில் அகில இந்திய பொறுப்பிலும் உள்ளார். இந்த நிலையில் இவரின் காரை மூதாட்டிக்கு சொந்தமான பார்க்கிங் இடத்தில் நிற்க வைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் அந்த மூதாட்டிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார் சுப்பையா. மேலும் அந்த மூதாட்டி வாசல் கதவு முன்பாக சிறுநீர் கழித்துள்ளார்.
இதற்கான சி.சி.டிவி காட்சியுடன் கடந்தவாரம் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மூதாட்டியின் உறவினர் பாலாஜி என்பவர் மூலமாக புகார் கொடுத்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், புகார் கொடுத்தவர்களையே காவல்துறையினர் தரக்குறைவாக பேசி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து இணைய ஊடகங்களில் அந்த காட்சிகள் வெளியான நிலையில் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள், சமுக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது சம்மந்தமாக அந்த மருத்துவரும் பா.ஜ.க நிர்வாகியுமான சுப்பையா மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தல் வழக்கு பதிவு செய்ய மேல்மட்ட காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.







கருத்துகள் இல்லை