Header Ads

  • BREAKING



    உயர்கல்வி; இறுதித் தேர்வு நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

    மாநில அரசுகளும் பல்கலைக்கழகங்களும் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவிதுள்ளது.

    மாநில அரசுகளும் பல்கலைக்கழகங்களும் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவிதுள்ளது. இருப்பினும், தேர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க யு.ஜி.சியை அணுகலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 30க்குள் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

    ஜூலை 6ம் தேதி யு.ஜி.சி வெளியிட்ட வழிகாட்டுதல்களை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், எந்தவொரு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும் நிலைமையைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்தால் அந்த தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

    யுஜிசி முடிவை ஆதரித்து தீர்ப்பளித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, அந்த தேதிக்குள் எந்தவொரு மாநிலமும் தேர்வுகளை நடத்த முடியாது என்று நினைத்தால், அவர்கள் தேர்வை நடத்த புதிய தேதிகளுக்கு யு.ஜி.சி-யை அணுக வேண்டும்.

    இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்வதற்கான மகாராஷ்டிரா, டெல்லி போன்ற சில மாநிலங்களின் முடிவுகளைத் விமர்சித்த யு.ஜி.சி, இதுபோன்ற முடிவுகள் உயர்கல்வியின் தரங்களை நேரடியாக பாதிக்கும் என்றும், உயர்கல்வியின் தரங்களை பிரத்தியேகமாக ஒருங்கிணைத்து நிர்ணயிக்கும் சட்டத்துறையில் ஒரு அத்துமீறலாக இருக்கும் என்றும் யு.ஜி.சி கூறியது. அது அரசியலமைப்பின் VIIவது அட்டவணையின் கீழ் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

    சாதாரண காலங்களில் பல்கலைக்கழக தேர்வுகளுக்கு யாரும் எதிரானவர்கள் அல்ல என்றும் தொற்றுநோய் காரணமாக யுஜிசியின் முடிவை மாணவர்கள் எதிர்க்கிறார்கள் என்றும் மனுதாரர்களில் ஒருவரால் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இறுதித் தேர்வு ஒரு மாணவரின் கல்வி வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம் என்று யு.ஜி.சி கூறியது. யு.ஜி.சி ஜூலை 6ம் தேதி வெளியிட்ட உத்தரவுக்கு கட்டுப்பட முடியாது என்று மாநில அரசு சொல்லக் கூடாது என்று தெரிவித்துள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad