Header Ads

  • BREAKING



    ஐஎஸ்எம் பாடல்களை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்.

    இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கல்யாண் ராம் நடித்துள்ள ஐஎஸ்எம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று(அக்டோபர் 5) மாலை ஐதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கல்யாண் ராமின் சகோதரரும் நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர் இவ்விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்.நிகழ்ச்சியில் பேசிய ஜூனியர் என்.டி.ஆர் தனது சகோதரர் கல்யாண் ராமிற்கு ஐஎஸ்எம் திரைப்படம் வெற்றிப்படமாக அமையும், இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ள கல்யாண் ராமிற்கு நிச்சய வெற்றி கிடைக்கும். ஐஎஸ்எம் படத்தை கல்யாண் ராமின் திரைஉலக வாழ்க்கையில் மைல் கல்லாக மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத்திற்கு நன்றி என்று கூறினார். இப்படத்தின் இசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளதாகக் கூறி அனுப் ரூபன்ஸை ஜூனியர் என்.டி.ஆர் பாராட்டினார்.மேலும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் குறித்து பேசிய ஜூனியர் என்.டி.ஆர், தெலுங்கு திரை உலகில் பல முன்னணி நடிகர்களுக்கும் வெற்றி படங்களை இயக்கிக் கொடுத்துள்ள பூரி ஜெகன்நாத் தான் விரும்பும் டோலிவுட் இயக்குனர்களில் ஒருவர் என்று கூறினார்.
    தனக்கும் டெம்பர் எனும் சூப்பர்ஹிட் படம் கொடுத்த பூரி ஜெகன்நாத், தனது திரைப்படங்களை டெம்பர் படத்திற்கு பின் டெம்பர் படத்திற்கு முன் என மாறுபடுத்தி பார்க்கும் வெற்றிப் படங்களுக்கு வழி வகுத்துக் கொடுத்தார் என்றும் கூறினார்.கல்யாண் ராம் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடிக்கும் ஐஎஸ்எம் படத்தில் அதிதி ஆர்யா நாயகியாக நடிக்கின்றார். அக்டோபர் 21ல் இப்படம் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad