Header Ads

  • BREAKING



    அதர்வா படத்திலிருந்து ஆனந்தி விலகல் ஏன்?

    இளவரசு என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம், 2எம்பி மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக, ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, ப்ரணீதா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.சென்னை, ஊட்டி, மதுரை போன் ஊர்களில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. வருகிற டிசம்பரில் இப்படத்தை வெளியிட இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் இருந்து விலகியிருக்கிறார் ஆனந்தி. கால்ஷீட் பிரச்சினைக் காரணமாக படத்திலிருந்து ஆனந்தி விலகியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
    ஆனந்தி தரப்போ வேறு ஒரு காரணத்தை சொல்லி வருகின்றனர். அதாவது ஆனந்திக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டரை ஒதுக்கிவிட்டு, மற்ற நடிகைகளுக்கு வெயிட்டான கேரக்டர்களை கொடுத்ததை அறிந்ததால் படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஆனந்தி விலகினாராம். தற்போது ஆனந்திக்கு பதிலாக அதிதி என்ற புதுமுக நாயகியை நடிக்க வைத்து ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad