அரசு நிலங்களை மீட்க சிறப்பு அதிரடிப் படை : அரசுக்கு நீதிமன்றம் கெடு.
ஆக்கிரமிப்பில் இருக்கும் அரசு நிலங்களை மீட்பது தொடர்பாக சிறப்பு அதிரடி படையை அமைக்காவிட்டால் நீதிமன்றமே குழுவை அமைத்து உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்பதற்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் ஒருங்கிணைந்த சிறப்பு அதிரடிப் படையை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் வருவாய்த் துறை செயலர் ஆர்.

வெங்கடேசன் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், "மனுதாரர் கூறிய பரிந்துரைகளை அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்தப் பரிந்துரைகள் சாத்தியமானவையா என்றும், அவற்றை அமல்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களைக் கண்டறிந்து மீட்பதற்கான குழுவை அரசு அமைக்காவிட்டால், நீதிமன்றமே அமைக்க நேரிடும். இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்தி அரசு தீவிர நடவடிக்கையில் இறங்காவிட்டால், நீதிமன்றமே தலையிட்டு அரசு நிலங்களை பாதுகாக்க வேண்டியச் சூழல் உருவாகும்.
இந்த வழக்கில், அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்துக்கு உதவியாக வருவாய்த் துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும். விசாரணை நவம்பர் 10-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

கருத்துகள் இல்லை