தீபாவளி பந்தயத்திலிருந்து விலகிய சைத்தான்.
தீபாவளி பந்தயத்திலிருந்து படங்கள் பின் வாங்குவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே சூர்யா நடித்து வரும் எஸ்-3 படம் தீபாவளி போட்டியிலிருந்து பின்வாங்கியது. அதன் பிறகு விஷால் நடிக்கும் கத்தி சண்டை, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் பந்தயத்திலிருந்து விலகின. இப்போது இன்னொரு படமும் பந்தயத்திலிருந்து விலகி யுள்ளது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் சைத்தான் படம்தான் அது.விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் சைத்தான் படத்துக்கு பிரதீப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும், இப்படம் செப்டம்பர் 23ம் தேதி வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. இறுதிகட்ட பணிகள் தாமததமானதால், தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என சில வாரங்களுக்கு விஜய் ஆண்டனி அறிவித்தார்.இந்நிலையில் மறுபடியும் இறுதிகட்ட பணிகள் தாமதமானதால், தற்போது தீபாவளிக்கு வெளியீட்டிலிருந்து பின்வாங்கியிருக்கிறது சைத்தான். தற்போது நவம்பர் வெளியீடாக திரைக்குக் கொண்டுவர படக்குழு முடிவு செய்திருக்கிறது. நவம்பர் 10ம் தேதி சைத்தான் படம் திரைக்கு வரவிருப்பதாக விஜய் ஆண்டனி தரப்பில் சொல்லப்படுகிறது.







கருத்துகள் இல்லை