NewsTEN இரவு செய்திகள் 16/11/2016
வங்கக் கடலில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது.
அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நவ்தேஜ் சர்னா பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை ரிசர்வ் வங்கிக்கு மேலும் 2 கன்டெய்னர் லாரிகளில் பணம் வந்தது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கன்டெய்னர் லாரிகள் சென்னை வந்துள்ளன. வந்துள்ள பணம் தமிழகத்தில் உள்ள பல வங்கிகளுக்கு ஓரிரு நாளில் பிரித்து அனுப்பப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் வின்டோஸ் மென்பொருள் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினார்.
அரசு செயல்படுத்தியதில் சில குறைபாடுகள் இருக்கலாம்; குறைகளை பிரதமர் ஆய்வு செய்கிறார் - வெங்கய்யா நாயுடு
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய முகநூல் பக்கத்தில் 'இந்தியாவில் கருப்புப் பணம் இனி இல்லை' என்ற வாசகம் அடங்கிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்
இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பயற்சி மேற்கொண்டுள்ளது. இதனை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப், ராணுவ தளபதி ரஹீல் ஷெரீஃப் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்
ஆவடி நகராட்சியின் 3வது வார்டு திமுக கவுன்சிலரின் மாமனார் வீரராகவலு( 60). இவர் இன்று மாலை 5.50 மணியளவில் ஆவடி டேங்க் பேக்டரி அருகில் உள்ள மைதானத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூரில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. சையது சர்புதீன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் பழைய கட்டடம் இடிக்கும் பணியின்போது சுவர் சரிந்து விழுந்து 3 பேர் காயமடைந்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆயுள் தண்டனை கைதி அப்பு காலமானார். கடந்த 3ம் தேதி ஊசி விழுங்கிய ஆயுள் தண்டனை கைதி அப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.
நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நெட் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த நவம்பர் 24ம் தேதி கடைசி நாளாகும் என சி.பி.எஸ்.இ தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி மீது மாதர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டில் தேர்தலின் போது பெண்களை பற்றி நாராயணசாமி தவறாக பேசியதாக சி.டி ஒன்றை மாதர் சங்கத்தினர் போலீசாரிடம் அளித்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில்சட்டம் ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளராக இருந்த ராஜிவ்ரஞ்சன் தலைமையகத்திற்கும். தலைமையகத்தில் இருந்த கவாஸ் சட்டம் ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளராகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
கொல்லத்தில் இருந்து சென்னைக்கு டிசம்பர் 4 ஆம் தேதிகளில் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு 2ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை -பெங்களூரு-மைசூரு வழித்தடங்களில்செல்லும்ரயில்களின் வேகம் அதிகரிக்க முடி வு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பணம் இல்லாத ஏடிஎம் மையத்திற்கு மலர் வளையம் வைத்து மக்கள் 'அஞ்சலி' செலுத்தினர்.
சி.பி.எஸ்.இ 9-ஆம் வகுப்பு பாட நூலில், நாடார் சமுகம் குறித்த எதிரான கருத்துகளை நீக்குவது தொடர்பான கோரிக்கை மனுவை 3 மாதத்தில் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு விமானநிலையங்களில் கடந்த ஒரே வார காலத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் 16 கிலோ தங்கமும் ரூ.4.5 கோடி ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
லண்டனில் இருந்து செயல்படும் பிபிசி சர்வதேச வானொலி மற்றும் தொலைக்காட்சி, 4 இந்திய மொழிகள் உள்பட 11 புதிய மொழிகளில் தனது சர்வதேச சேவையை விரைவில் விரைவுபடுத்தவுள்ளது
சுரங்க தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமண விழாவில் நடனமாட நடிகை ராகுல் ப்ரீத் சிங் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.








கருத்துகள் இல்லை