சைத்தான் டிசம்பர்-2 ல் வெளியீடு என அறிவிப்பு.
நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் அடுத்த படம் "சைத்தான்.' வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனியுடன் அருந்ததி நாயர், சாருஹாசன், கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன், "ஆடுகளம்' முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
விஜய் ஆண்டனி நடித்து ஹிட் ஆன பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டிலும் நிலவும் பணத்தட்டுப்பாடு காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 2-ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.







கருத்துகள் இல்லை