Header Ads

  • BREAKING



    புதிய 2000 ரூபாய் வடிவில் கலக்கி வரும் 'ரூபாய்' பட போஸ்டர்.

    இயக்குநர் பிரபு சாலமன் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான 'ரூபாய்' படத்தின் போஸ்டர் புதிய 2000 ரூபாய் வடிவில் நகரம் முழுவதும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது.
    கடந்த 8-ஆம் தேதி மாலை முதல் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானது முதல் நாட்டில் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகிறனர். மேலும் தங்களது கையிருப்பில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை அவசர அவசரமாக மாற்றி வருகின்றனர்.
    இந்நிலையில், சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த், கிஷோர், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் தயாரிக்கும் புதிய படமான 'ரூபாய்' பட போஸ்டர், முதலில் பழைய ரூபாய் தாள் வடிவில் "FirstLook"-காக வெளியிடப்பட்டிருந்து.
    இதனிடையே பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பயன்படுத்தி புதிய 2000 ரூபாய் வடிவில் படத்தின் புதிய போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
    இந்தபடத்திற்கு இமான் இசையில் அன்பழகன் இயக்கி உள்ளார். "பணத்தாசை தான் எல்லா தீமைகளுக்கும் ஆணி வேர்" என்ற ஒற்றை வரி கதையை கருவாக வைத்து திரைக்கு வருகிறது 'ரூபாய்'.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad