Header Ads

  • BREAKING



    கருப்புப் பணத்துக்கு 200% அபராதம் என்றால் எவ்வளவு? இதோ உங்களுக்கான பதில்.

    புது தில்லி: கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற எத்தனையோ குறுக்கு வழிகள் இருந்தாலும், நேர்மையான வழிகளுக்கான கதவையும் மத்திய அரசு திறந்தே வைத்துள்ளது.
    வருமான வரியுடன், அபராதத் தொகையும் செலுத்தி, கைவசம் உள்ள கருப்புப் பணத்தை நேர்மையான முறையில் வங்கியில் டெபாசிட் செய்யலாம்.
    200 சதவீத அபராதம் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்காக இதோ ஒரு சின்ன விளக்கம்.
    அதாவது, ரூ.2.5 லட்சம் வரை வங்கியில் டெபாசிட் செய்தால், வரி பிடித்தமோ அபராதமோ கிடையாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் கைவசம் உள்ள தொகையை தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி தேவைப்படும்போது பணமாக எடுத்துக் கொள்ளலாம்.
    அதே சமயம் 5 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தும் போது அதற்கு வருமான வரியாக - 25,000மும், அபராதமாக 50 ஆயிரமும் என மொத்தம் 75,000ம் பிடித்தம் செய்யப்படும். இது மொத்த தொகையில் 1.5சதவீதம் தான். எனவே, 4.25 லட்சம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
    ஒருவேளை உங்களிடம் இருக்கும் 10 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றால் அதற்கு வருமான வரியாக ரூ.1.45 லட்சமும், அபராதமாக 2.50 லட்சமும் என மொத்தம் 3.75 லட்சம் பிடித்தம் செய்யப்படும். இது மொத்த தொகையில் 37.5சதவீதம். எனவே, 6.25 லட்சம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
    ஆனால், உங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாயை செலுத்தும் போது அதற்கு வருமான வரியாக - 2.75 லட்சமும், அபராதமாக 5.50 லட்சமும் என மொத்தம் 8.25 லட்சம் பிடித்தம் செய்யப்படும். இது மொத்த தொகையில் 55 சதவீதம் ஆகும். எனவே, உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.6.75 லட்சம் வரவு வைக்கப்படும்.
    அதே சமயம் 30 லட்சம் ரூபாயை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தினால், அதற்கு வருமான வரியாக 7.25 லட்சமும், அபராதமாக 14.50 லட்சமும் என மொத்தம் 21.75 லட்சமும் பிடித்தம் செய்யப்படும். இது மொத்த தொகையில் 21.75சதவீதம் தான். எனவே, 8.25 லட்சம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
    சரிங்க... எங்கிட்ட 50 லட்சம் இருக்குங்க.. அதை டெபாசிட் செய்யவும். அபராதம் எவ்வளவு ஆகும்ணு பாருங்கனு சொல்றவங்களுக்கு.. இதோ - 50 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தினால், அதற்கு வருமான வரியாக - ரூ.13.50 லட்சமும், அபராதமாக ரூ.27 லட்சமும் என மொத்தம் ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் பிடித்தம் செய்யப்படும். இது மொத்த தொகையில் 81 சதவீதம். எனவே, உங்கள் வங்கிக் கணக்கில் சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் வரவு வைக்கப்படும்.
    ஒரு கோடி என்றால்...
    ஒரு கோடி ரூபாயை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தால் அவர்களுக்கு 28.25 லட்சம் ரூபாய் வருமான வரியாக பிடித்தம் செய்யப்படும். ரூ.56.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மொத்தமாக 1 கோடி ரூபாயில் 84 லட்சத்து 75 ஆயிரத்தை அதாவது 85 சதவீதத் தொகையை பிடித்துக் கொண்டு மீதமிருக்கும் ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
    இழக்கும் தொகை அதிகமாக இருந்தாலும் இதன் மூலம் உங்கள் கைகள் கரைபடியாத கைகளாக மாற்றப்படுகிறது. உங்களிடம் இருக்கும் பணம் வெள்ளைப் பணமாக மாறி, நீங்களும் தலைநிமிர்ந்து நடக்கலாம்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad