Header Ads

  • BREAKING



    புவி வெப்பம் அடைவதை தடுக்க: 200 நாடுகள் அறிவிப்பு!

    பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தப்படி புவி வெப்பம் அடைவதை தடுப்பதே அவசர தேவை என இந்தியா உள்பட 200 நாடுகள் தெரிவித்துள்ளன.
    பாரீசில் கடந்த 2015ம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்றது. அப்போது புவியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்ய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்களை வரும் 2017க்குள் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை மொராக்காவின் மாரகேசில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாசபையின் கூட்டம் நடைபெற்றது.
    அதில் இந்தியா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பங்கேற்றன.
    அப்போது புவி வெப்பம் அடைவதால் ஏற்படக்கூடிய ஆபத்தை தடுத்து நிறுத்துவது உடனடி தேவை என கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் உறுதியேற்றன. இந்நிலையில் அமெரிக்க புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை ஏற்கமாட்டேன் என ஏற்கனவே அறிவித்திருந்ததால் பாரீஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து வரும் 2018க்குள் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற அனைத்து நாடுகளும் உறுதியேற்றுள்ளதாக ஐநாசபை அறிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad