Header Ads

  • BREAKING



    பாபநாசம், அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு.

    பாபநாசம், அடவிநயினார், ராமநதி, கடனாநதி அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது.
    மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி, பாபநாசம் அணையில் 6 மி.மீ., பாபநாசம் கீழ் அணையில் 3 மி.மீ., சேர்வலாறு அணையில் 5 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 6 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 2.8 மி.மீ., பாளையங்கோட்டையில் 2 மி.மீ., திருநெல்வேலியில் 2 மி.மீ. மழையும் பதிவானது.
    பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 570.95 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 32 கனஅடி, கடனாநதி அணைக்கு 61 கனஅடி, ராமநதி அணைக்கு 11 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 15 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 8 கனஅடி நீர்வரத்து இருந்தது.
    அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணை 1.80 அடி உயர்ந்து 33 அடி, சேர்வலாறு அணை 52.30 அடி, மணிமுத்தாறு அணை 35.10 அடி, கடனாநதி அணை 1.50 அடி உயர்ந்து 47.50 அடி, ராமநதி அணை 1.25 அடி உயர்ந்து 40.25 அடி, கருப்பாநதி அணை 39.10 அடி, குண்டாறு அணை 23.37 அடி, அடவிநயினார் அணை ஓரடி உயர்ந்து 63 அடி, வடக்குப் பச்சையாறு அணை 3.25 அடி, நம்பியாறு அணை 3.25 அடி, கொடுமுடியாறு அணை 7 அடி.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad