Header Ads

  • BREAKING



    எப்.ஐ.ஆர். போட்ட 24 மணி நேரத்தில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம்.

    சென்னை: காவல்நிலையங்களில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அது குறித்த தகவல்கள் இணையதளத்தில் பார்க்கலாம் என தமிழ்நாடு காவல் துறையின் குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி சீமா அகர்வால் தெரிவித்துள்ளார்.
    நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த மாதம் 15-ஆம் தேதி முதல் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தமிழக காவல் துறை நடவடிக்கை எடுத்தது.
    இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்தில் எழுத்தராக இருக்கும் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு கணினியில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவது குறித்து பல்வேறு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டன.
    இந்த நிலையில், 15-ஆம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது, என தமிழ்நாடு காவல் துறையின் குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி சீமா அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad