Header Ads

  • BREAKING



    காற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளிகளுக்கு விடுமுறை.

    புதுதில்லி: தில்லியில் காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளதால் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
    மேலும் தில்லியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் 94 நகரங்களில் காற்று மாசுபாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காற்று மாசுபாடு அடைந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. 
    அதில் காற்று மாசுபாட்டில் மோசமாக உள்ள நகரங்களில் முதல் 20 இடங்களில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் நாட்டின் 94 நகரங்களில் காற்று அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆனால் இந்த பட்டியலில் உள்ள நகரங்கள் பெரும்பாலும் 1990-களில் இடம்பெற்றிருந்தவையே என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad