Header Ads

  • BREAKING



    4ஜி சேவையில் களமிறங்க பி.எஸ்.என்.எல். திட்டம்.

    இந்தியாவின் மிகப்பெரிய அலைக்கற்றை ஏலத்தில் விற்கப்படாமல் போன 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வாங்கி 4ஜி சேவையில் களமிறங்க பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஆர்வம் காட்டி வருகிறது.
    அண்மையில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை அடிப்படை விலை மெகாஹெர்ட்ஸ் ஒன்றுக்கு ரூ.11,485 கோடியாக மத்திய அரசு நிர்ணயம் செய்தது.
    இந்த விலை மிகவும் அதிகம் என்று தெரிவித்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த அலைக்கற்றையை ஏலத்தில் எடுக்கவில்லை.
    இந்த நிலையில், 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 5 மெகாஹெர்ட்ஸ் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி மத்திய தொலைத் தொடர்பு துறையிடம் பி.எஸ்.என்.எல்.
    நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஈடாக, மத்திய அரசு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை குறைந்த கட்டமைப்பு வசதியில் அதிக கவரேஜ் தரக் கூடியது.
    அந்த அலைக்கற்றையைக் கையகப்படுத்துவதன் மூலம் 4ஜி சேவையில் களமிறங்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad