Header Ads

  • BREAKING



    414 தாற்காலிக மருத்துவர்கள் பணிக்கு விண்ணப்பிக்க நவ. 9 கடைசி.

    சென்னை: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் 414 உதவி அறுவைச்சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 9-ஆம் தேதி கடைசியாகும்.
    மயக்கவியல் - 91, உடற்கூறு இயல் - 15, உயிரிவேதியியல் - 7, தடயவியல் - 9, பொது மருத்துவம் - 30, பொது அறுவைச்சிகிச்சை - 22, மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவம் - 138, குழந்தைகள் நலம் - 7, நோயியல் - 16, மருந்தியல் - 4, உடல்இயல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவம் - 5, உடலியியல் - 7, கதிரியக்க நோயறிதல் - 21, கதிரியக்க சிகிச்சை - 7, சமூக மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவம் - 22, காசநோய் மற்றும் நெஞ்சு நோய்கள் - 14 என மொத்தம் 16 துறைகளில் மொத்தம் 414 மருத்துவர்கள் தாற்காலிக முறையில் உதவி அறுவைச்சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியத்தின் சார்பில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணியிடங்களுக்கு மருத்துவ தேர்வு வாரியத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் மூலம் விண்ணப்பிப்பதற்கு நவம்பர் 9-ஆம் தேதி கடைசியாகும். விண்ணப்பக் கட்டணத்தைத் செலுத்துவதற்கு நவம்பர் 11-ஆம் தேதி கடைசியாகும்.
    தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது. மருத்துவப் படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலின் மூலமே தேர்வு செய்யப்படுவார்கள்.
    மேலும் விவரங்களுக்கு: www.mrb.tn.gov.in

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad