Header Ads

  • BREAKING



    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.

    சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் வெல்டிங் ஊழியர் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    அனகாபுத்தூர் கோபால் செட்டித் தெருவைச் சேரந்த வெல்டிங் ஊழியர் செல்வம் சுடலைமுத்து (35). அவரது மனைவி துளசி (30). இவர்களுக்கு பிரித்தி (8) சரண்யா(5) என்ற இரு மகள்கள் இருந்தனர்.
    இவரது வீடு கடந்த சில நாள்களாகப் பூட்டிக் கிடந்துள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
    இதில், சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் சங்கர்நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது செல்வம் சுடலை முத்து, மனைவி துளசி, இரு குழந்தைகள் நைலான் கயிற்றில் தூக்கு போட்டு அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர்.
    இதையடுத்து, 4 பேரின் உடல்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட செல்வம் சுடலைமுத்துவுக்கு கடன் தொல்லை காரணமா அல்லது வேறு காரணம் எதுவும் உள்ளதா என்பது குறித்து சங்கர் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad