இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு: 520 காலியிடங்கள்.
சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் நாள் கலந்தாய்வின் முடிவில் 520 காலியிடங்கள் உள்ளன.
பி.எஸ்.எம்.எஸ். (சித்த மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ். (ஆயுர்வேதம்), பி.யு.எம்.எஸ். (யுனானி), பி.என்.ஒய்.எஸ். (இயற்கை மருத்துவம் மற்றும் யோகா), பி.எச்.எம்.எஸ் (ஹோமியோபதி) ஆகிய படிப்புகளுக்கு, 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 356 இடங்களும், 21 தனியார் கல்லூரிகளில் 1,000 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. இதற்கான முதற்கட்ட கலந்தாய்வு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக் குழு அலுவலகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
முதல் நாள் கலந்தாய்வின் முடிவில் அரசுக் கல்லூரிகளில் 222 இடங்கள் நிரப்பப்பட்டு மீதம் 134 இடங்கள் உள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 614 இடங்கள் நிரப்பட்டு, மீதம் 386 காலியிடங்கள் உள்ளன.
காலியாக உள்ள 520 இடங்களுக்குத் தொடர்ந்து நவம்பர் 6,7 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை